{"title":"Agriculture","description":null,"products":[{"product_id":"iyarkkai-velanmai-a-muthal-ak-varai","title":"இயற்கை வேளாண்மை","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI522\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748397088862,"sku":"MAVI522","price":65.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"nel-vikatan","title":"நெல்","description":"\u003cp\u003eமேம்போக்கான சிந்தனையில் மிதந்துகொண்டும்,ஆரோக்கிய வாழ்வுக்கான அடையாளங்களை அடமானம் வைத்துக்கொண்டும் இருக்கும் இன்றைய இளைய சமுதாயம்,விவசாய நிலங்களையும் விட்டுவைக்கவில்லை.‘உயர் விளைச்சல்’ என்ற ஆசையில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என்று,செயற்கை இடுபொருட்களின் மூலமும், இயற்கைக்கு மாறான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் மண்ணின் உயிர்ச்சத்துகள் உறியப்படுவது தொடர்கதையாகிவிட்டது.வெத்து மண்ணாக இருந்த மொத்த மண்ணும்,சத்துமிக்க மண்ணாக மாறும் காலம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆம்! பசுஞ்சாணம்,வைக்கோல், கால்நடைகளின் கழிவு என, விளைநிலத்தில் இயற்கை வழி இடுபொருட்களையே உரங்களாக மாற்றி,நாட்டு ரக விதைகளை நட்டு, சமவெளித் தொடங்கி மலைப் பிரதேசங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் வெள்ளாமை செய்வதற்கான எளிய முறைகளை, இந்த நூல் நமக்குக் கற்றுத் தருகிறது.மேலும், இயற்கை விவசாயத்தில் குழியடிச்சான், மாப்பிள்ளைச் சம்பா, கூம்பாலை, சூரக்குறுவை, கருங்குறுவை, சீரகச்சம்பா என்று பாரம்பரிய நெல் ரகங்களைக் கொண்டு விளைச்சல் செய்துவரும் விவசாயப் பெருமக்களின் உழவு அனுபவங்கள் இந்த நூல் முழுவதும் விரவி இருக்கின்றன.கடந்த பல மாதங்களாக ‘பசுமைவிகடனி’ல் ‘மகசூல்’ என்ற தலைப்பில் நூலாசிரியர் காசி.வேம்பையன் எழுதி வெளிவந்த, இயற்கைவழி விவசாய அனுபவங்களில் தேர்ந்தெடுத்த தொகுப்பின் மொத்த பதிப்பு இது.இயற்கையோடு இயற்கையாக இணைந்து செயல்பட்டு,வளத்தின் அடிப்படையில் வருமானத்தைப் பெருக்க விரும்பும் விவசாயப் பெருமக்களுக்கான விவசாய வழிகாட்டி,இந்த நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI483\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748477567070,"sku":"MAVI483","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/9412_1.jpg?v=1792044387"},{"product_id":"indha-pookal-virpanaikku-vikatan-publications","title":"இந்தப் பூக்கள் விற்பனைக்கு","description":"\u003cp\u003eமலர்கள் இல்லாத உலகத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா...? சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை! உணவுப் பொருள்களைப் போலவே நம்முடைய வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட பல விஷயங்களில் ஒன்றுதான் இந்த வண்ண வண்ண மலர்கள். கத்தரிக்காய், முருங்கைகாய், நெல், கரும்பு என்கிற விவசாய விளைபொருள் வரிசையில் மலர்களும் விளைபொருட்கள்தான். என்றாலும், மலர்களின் விற்பனை என்பது தனித்தன்மை கொண்டது. நிறமும் மணமும் ஓரிரு நாட்களே உயிர் பெற்றிருக்கும் என்றாலும், திருமணம் மற்றும் பூஜைக்கான பொருளாக மதிக்கப்படுவதால் மலர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மலர்ச் சந்தை என்பது உள்ளூரில் மட்டுமல்ல... உலக அளவிலும் மிகமிகப் பெரியது! இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, மலர் சாகுபடியை கையில் எடுத்து, வெற்றி வாசம் வீசியபடி வலம் வரும் விவசாயிகள் தமிழக அளவில் நிறையவே இருக்கிறார்கள். \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI213\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751014760542,"sku":"MAVI213","price":55.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4091_1.jpg?v=1792056384"},{"product_id":"manpuzhu-mannaru-vikatan-publications","title":"மண்புழு மன்னாரு","description":"\u003cp\u003eஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது நமது வேளாண்மை. சங்க இலக்கியம் முதல் நாட்டார் பாடல்கள் வரை ஏராளமான வேளாண்மை தொழில்நுட்பங்கள் சொல்லப்பட்டுள்ளன. அந்த தொழில்நுட்பங்களை விவசாயிகள் புரிந்து கொண்டு பயன்படுத்தும் வகையில், எளிய நடையில் பசுமை விகடன் இதழில் மண்புழு மன்னாரு என்ற பெயரில் எழுதிவருகிறார் பொன்.செந்தில்குமார். அர்த்தசாஸ்திரம், விருஷ ஆயுர்வேதம், மாட்டு வாகடம்... என நூற்றாண்டு பழமை வாய்ந்த நூல்களில் இருந்தெல்லாம்கூட விவசாயம் மற்றும் கால்நடை தொடர்பான தொழில்நுட்பச் செய்திகளை திரட்டியிருக்கிறார். பாட்டன், முப்பாட்டன் சொல்லி வைத்த, செவி வழியாகவே உலாவிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களையும்கூட அவர் விட்டுவைக்கவில்லை. இந்த தொழில்நுட்பச் செய்திகள், எளிமையான வார்த்தைகளில், நறுக்குத் தெறித்தாற்போல் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பு. ‘பசுமை விகடன்’ ஒவ்வொரு இதழிலும் வெளிவந்த தொழில்நுட்பங்களையெல்லாம் பயன்படுத்தி பலன் பெற்ற வாசக விவசாயிகள், ‘மண்புழு மன்னாரு எப்போ தனிப் புத்தகமாக வரும்?’ என்று தொடர்ந்து கேட்கத் தொடங்கியதன் விளவே, இந்த கையடக்க புத்தகம்!\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI211\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751015317598,"sku":"MAVI211","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4089_1.jpg?v=1792056392"},{"product_id":"kozhi-valarppu-vikatan-publications","title":"கோழி வளர்ப்பு","description":"\u003cp\u003eநாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்நடைகளை வளர்த்து விற்பனை செய்பவர்களும் உண்டு. உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல பலனைக் காண்போர் அதிகம். நாட்டுக்கோழி வகைகள், கோழி வளர்ப்பு முறைகள், கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை, கோழிகளுக்கும் குஞ்சுகளுக்குமான தீவன முறைகள், அலங்காரக்கோழிகளின் மூலம் அதிக வருவாய் பெறும் முறைகள், புறக்கடைக் கோழி வளர்ப்பில் அமெரிக்க முறை... என கோழி வளர்ப்பில் உள்ள ஏராளமான செயல்முறைகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜி.பிரபு. கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணை முதலீட்டாளர்கள்... என பல்வேறு நிபுணர்களின் கோழி வளர்ப்பு அனுபவம் மற்றும் மருத்துவம் குறித்தக் கருத்துகளும், வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு உள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI207\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751015710814,"sku":"MAVI207","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4085_1.jpg?v=1792056399"},{"product_id":"panam-kottum-pannai-thozhilgal-vikatan-publications","title":"பணம்கொட்டும் பண்ணைத் தொழில்கள்","description":"\u003cp\u003eஇன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே திக்குமுக்காடிப் போகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வேலையோ, சீரான வருமானமோ கிடைப்பதில்லை. வறட்சி, வெள்ளம், காற்று என்று இயற்கையின் பாதிப்பாலும், பூச்சி, புகையான், வண்டு போன்ற நோய்த் தாக்கு தலாலும், ஆள் பற்றாக்குறையாலும், உற்பத்திக்கு ஏற்ப விலை கிடைக்காமலும் விவசாயத் தொழில் நசிந்து வருகிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉரிய வாழ்வும் வளர்ச்சியும் இல்லாததால், விவசாய வேலை செய்தவர்கள் வாழ வழி தேடி, நகரங்களில் கட்டடங்கள் கட்டுதல், கட்டடங்களுக்கு பெயிண்டிங் வேலை செய்தல், பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் காவல் புரிதல் என்று ஊர் ஊராக பெரும் நகரங்களுக்கு இடம்பெயர்வதும் கண்கூடு. அப்படிப்பட்டவர்களுக்கு, சிறு முதலீட்டில் தங்கள் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய வாழ்க்கை-வசதியை அமைத்துக்கொள்ள இந்த நூல் எடுத்துச் சொல்கிறது. தேனீ, காடை, புறா, வாத்து, வான்கோழி, கின்னிக் கோழி, காளான் என்று இவற்றை வளர்ப்பதை, பொழுதுபோக்காக, விளையாட்டாக, மனது லயித்து இந்த வேலைகளைச் செய்யலாம். வருமானத்தையும் ஈட்டலாம். அதோடு தாங்களே தொழிலதிபராக இருக்கலாம். அதற்கு வழிகாட்டும் மகத்தான நூல் இது!\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI200\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751016202334,"sku":"MAVI200","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4078_1.jpg?v=1792056407"}],"url":"https:\/\/myangadi.com\/collections\/agriculture-books.oembed","provider":"My Angadi","version":"1.0","type":"link"}