
- Stock: Instock (Ships Immediately)
- Model: MAVA051
சந்திரகுப்த மௌரியரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும் நாவல் விலை ராணி. நாவலின் பெரும்பகுதி மௌரிய பேரரசின் விரிவாக்கத்திற்காக சந்திரகுப்தன் மெற்கொண்ட போர் காலகட்டத்தில் கதை நகர்த்தப்படுகிறது. சாண்டில்யனின் மற்ற நாவல்களை காட்டினும் இந்நாவலில் அவரின் எழுத்து நடை முற்றிலும் பல வேறுபாடுகளைக் கொண்டு அமைந்துள்ளது. தேக்கம் இல்லாத விறுவிறுப்பான நடை. அடுத்தடுத்த கட்டங்களுக்கு சட்டென பாய்ந்து செல்லும் முறையும் படிப்பவரின் ஆவலை ஆட்கொள்கிறது. மன்னன் மகள் நாவலில் கௌடில்யரின் அர்த்த சாஸ்திர முறையிலான போர் தந்திரங்கள் பரவலாக விவரிக்கப்பட்டிருக்கும்
விலை ராணியில் அர்த்த சாஸ்திரியான சாணக்கியரைப் பற்றிய வரலாறும் இணைக்கப்பட்டிருப்பது கதைக்கு பெரும் பலம். கிரேக்க சாம்ராஜ்யாதிபதி அலேக்செண்டரால் விட்டுச்செல்லப்பட்ட பாரத நாட்டினை கண்முன் கொண்டு வரும் யுக்தியும் மிகச் சிறப்பு. வீரகுப்தன், விலைராணி பிரபாவதி தேவி, ஆண்டரி போன்ற கற்பனை கதாபாத்திரங்கள் நாவலுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. விலை ராணி எதனால் உருவாகிறாள்? தட்சஷீலத்தில் பெண்களை விற்பனை செய்யும் சந்தை ஒன்று அக்காலகட்டத்தில் இருந்ததிற்கான சரித்திர கூறுகள் ஊண்டு. அதை மக்களிடம் தெரிவிப்பதையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் செயல்பட்டிருக்கிறார். அப்படி விற்பனை செய்யப்படும் பெண்களை பல நாட்டவரும் வாங்கிச் செல்கிறார்கள். வாங்கிச் செல்லப்படும் பெண்கள் அடிமைகளாகவும், மனைவியாகவும் உரிமையாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.
அரசியல் நோக்கத்திற்காக திருமணச் சந்தையில் தன்னை விற்பனை பொருளாக்கிக் கொள்கிறாள் விலை ராணி. இக்கதையில் வீரகுப்தனும், சந்திரகுப்தனும் நாயகர்களாக காட்டப்படுகிறார்கள். ஆனால் அதன் பின்னனியில் பெரும் தூண்டுகோளாக செயல்படுகிறார் சாணக்கியர். பாடலீபுத்ர நாட்டின் மீது கொள்ளும் படையெடுப்பே இந்நாவலின் உச்சகட்டமாக அமைகிறது. அது போக சாணக்கியரின் சபதம் சுய இலாபத்தின் பேரில் அமைந்துவிடுவதாகவும் எண்ணச் செய்கிறது. ஆபத்து சூழ்ந்த வேளையிலும் விலை ராணியோடு காம இச்சை கொள்வதை போல் சித்தரிக்கப்படும் வீரகுப்தனின் போக்கு அதிகபடியானதே. காதல், நட்பு, சகோதர பாசம், அரச விசுவாசம், சாணக்கிய தந்திரம் என பலவற்றையும் கொண்டு இந்நாவல் அலசப்பட்டிருக்கிறது. மௌரிய பேரரசின் வெற்றிக்கு சாணக்கிய தந்திரமே வித்தாக அமைந்துள்ளது என்பதை ஆசிரியர் முன்மொழிகிறார். இந்நாவல் சந்திரகுப்த மௌரியரின் இளமை கால வாழ்க்கையை அறியாதவர்களுக்கு அதை முழுமையாக உணர வைக்கும். - தமிழ்நேசன், usetamil.net
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274